வர்ணத்தின் புதிய வரவு

இலங்கை மக்களின் இதயங்களை வென்ற வானொலியும், தமிழ் வானொலிகளில்
அதிக தேசிய விருதுகளை பெற்ற ஒரே ஒரு
வானொலியுமான வர்ணம் FM தனது இணையத்தள பாவனையாளர்களுக்கு இன்று முதல் மேலும் பல வசதிகளை வழங்கியுள்ளது .

இன்று காலை வர்ணத்தின் பணிப்பாளர் திரு நவநீதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் VOICE OF ASIA வலையமைப்பின் நிறைவேற்று அதிகாரி அஜாஸ் சபீக் இவ் புதிய வடிவமைப்பிலான இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.

வர்ணம் அலைவரிசையின் நிகழ்ச்சிகளின் விபரங்கள் ,நேயர்களை வானொலி மூலம் மகிழ்ச்சிப்படுத்திய வர்ணம் அறிவிப்பாளர்களின் படங்கள் ,சினிமா செய்திகள் , புதிய திரைப்படங்களின் விமர்சனங்கள் ,செம ஹிட்ஸ் பாடல் தெரிவுகள் என பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக வர்ணத்தின் புதிய இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

0
Shares