சிம்புவின் இறுதி எச்சரிக்கை

சர்ச்சை என்றாலே சிம்புதான் என்ற நிலையில் இருக்கின்றது.
சமீபகாலமாக அவர் பிக் பாஸ் புகழ் ஓவியாவை திருமணம் செய்ய தயார் என்று டுவிட் செய்ததாக செய்திகள் பரவின, ஆனால் அப்போதே அந்த டுவிட் போலி என்றும் உறுதியானது.
இது குறித்து  சிம்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த போலி செய்திக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றும் இதுவே அவர்களுக்கான இறுதி எச்சரிக்கை எனவும், இதுபோல் மீண்டும் தொடர்ந்தால் தன்னுடைய இன்னுமொரு முகத்தை பார்க்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
0
Shares