உங்கள் ஐபோன் மெதுவாக இயங்குகிறதா?

ஐபோன்கள் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும் பயன்பாடுகளின் ஆட்டோ அப்டேட்டுகளாகத்தான் இருக்கும். அதனை இல்லாமல் ஆக்குவதன் மூலமாக வேகத்தை அதிகரிக்கலாம்.

அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும். இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

கிடைக்கும் பொழுதெல்லாம் இணைய தேடல் வரலாறுகளை நீக்கிக் கொண்டே இருப்பது அவசியம் . இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற விரைவு நினைவகத்தினை அடிக்கடி அழித்து விடுவது அவசியம் .
Settings > Safari> Clear History

அன்றாடம் குறைந்தது ஒருமுறையாவது ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும்..

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால் ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஐபோன் சாதனம் மெதுவாக செயற்படாமல் தடுக்கலாம்.

0
Shares