தலையை குறி வைக்கும் இமான் அண்ணாச்சி

தல அஜித்தின் நடிப்பில் அனிருத்தின் இசையில் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் விவேகம்.
இந்த படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடி இருந்தாலும் உலக நாடுகளில் அதிகூடிய திரையரங்கில் வெளியாகப்  போகும் படம் விவேகம் தான் என்ற தகவல் பரவலாக சமூக வலயத்தளங்களில் பரவி வருகிறது.
விவேகம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானது முதல் இன்னும்  கொஞ்சம் எதிர்பார்ப்பு கூட ஆரம்பித்திருக்கிறது  தல ரசிகர்கள் மத்தியில்.
இப்படியான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தல அஜித்துக்கு சிலை வைத்து  அதனை சக நடிகர்களைக் கொண்டு திறப்புவிழா நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போன்ற ஒரு சிலையினை திறப்பதற்காக நடிகர் இமான் அண்ணாச்சி அழைக்கப்பட்டுள்ளார்.
சிலையை திறந்ததன் பின்னர் அஜித் ரசிகர்களிடம் கவலையுடன் கூறிய கருத்து நான் இதுவரை தல அஜித்துடன் நடித்ததில்லை நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
0
Shares