யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டி

சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச் டேப் மூலம் பார்க்க இயலும். இதில் சில சமூக வலைதளங்களால் நிதியுதவி செய்யப்பட்ட காணொளிகளும் அடங்கும்.

முகநூல் பயனாளர்கள் அவர்களின் நண்பர்கள் பார்க்கும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய காணொளிகளை இதன் மூலம் காண முடியும்.

 

நண்பர்கள் பதிவிடும் கருத்துகளையும் பயனாளர்களால் பார்க்க முடியும். மேலும், வீடியோக்களை காண்பதற்கு குழுக்களையும் உருவாக்கவும் முடியும்.

0
Shares