உள்ளங்கையில் உறங்க காத்திருக்கும் குட்டிக் காதலன்

தற்போது சாம்சுங் ,ஆப்பிள், கூகுள் போன்ற பல நிறுவனங்களால் ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவை அளவில் சற்று பெரிதாகவே இருக்கின்றன.

இந்நிலையில் மிகவும் சிறிய ஸ்மார்ட் போன் ஒன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது
இப் போனினை  Ghost Technologies நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Nanite Micro  என அழைக்கப்படும் இப் போன் 1.8 அங்குல அளவே உயரம் உடையது.
முற்று முழுதாக அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் போனினை ஏனைய Android மற்றும்  IOS சாதனங்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியும்.

இதில்   உட்பட SIM  கார்ட் வசதியும் microSD வசதியும்   உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது  Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள குறித்த போன்னானது   இவ் வருடம் நவெம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

0
Shares