2050-ல் மும்மடங்காகும் இவர்கள்

பார்வையிழப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு தசாப்தங்களில் மும்மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சைகளை மேம்படுத்த போதுமான அளவு நிதி வழங்காவிட்டால், பார்வையிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையான 3.6 கோடியில் இருந்து, 2050ஆம் ஆண்டளவில் 11.5 கோடியாக அதிகரித்துவிடும் என்று லான்செட் க்ளோபல் ஹெல்த் (Lancet Global Health) என்னும் மருத்துவ சஞ்சிகை கணிப்பு வெளியிட்டுள்ளது.

 

வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் பார்வையிழப்பும், பார்வைக் குறைபாடும் அதிகமாகக் காணப்படுகின்றன.

 

அந்த ஆய்வின்படி, உலக அளவில், மக்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளின் விகிதம் குறைந்துள்ளது.

பார்வையிழப்பு புள்ளிவிவரம்:
 தெற்காசியாவில் 1.17 கோடி மக்கள்
 கிழக்கு ஆசியாவில் 62 லட்சம் மக்கள்
 தென்கிழக்கு ஆசியாவில் 35 லட்சம் மக்கள்
 ஆஃப்ரிக்க சஹாரா பாலைவனப் பகுதியில் 4 அதிக மக்கள்
 மேற்கு ஐரோப்பாவில் 0.5 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள்

 

0
Shares