பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அரசியல் நடத்தும் வசூல் ராஜா

இன்று உலக தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.அதனால் தான் நல்ல விளம்பரம் கிடைக்கிறது.

ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியை ஒரு விதமான அரசியல் நோக்கத்துடன் தொகுப்பாளர் கமல்ஹாசன் நடத்துவதாக பார்வையாளர்கள் மத்தியில் நினைக்க தோன்றுகிறது .

நேற்றைய நிகழ்ச்சியில் ஆள் காட்டி விரலை உயர்த்தி காட்டி இந்த விரலை நீங்கள் தேவையான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.அதுவும் இந்த விரலில் மை கறை மட்டுமே இருக்க வேண்டும் .உங்கள் எண்ணத்தில் கறை இருக்க கூடாது என்று அரசியல் வசனங்களே அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிகளில் அரசியல் கலக்காத இந்த தொலைக்காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.எல்லாம் புகழும் கமலுக்கே.

 

0
Shares