“மாதவிடாயின்போது கோயிலுக்கு சென்றேன்”- என கூறிய பெண் எழுத்தாளர் மீது ஆன்லைன் தாக்குதல்

சமூக வசமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக கூறப்படும் ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளருக்கு எதிராக, குஜராத் எழுத்தாளர் காஜல் ஓஜா வைத்தியா அகமதாபாத் சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

மாதவிடாய் பற்றிய பழையான நம்பிக்கைகளுக்கு மாறாக வைத்தியா பேசிய பிறகு, அவர் மீது சமூக வலைத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது போன்ற மூடநம்பிக்கை கட்டுப்பாடு குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தனது பேட்டியில் காஜல் ஓஜா வைத்தியா கூறியிருந்தார். மாதவிடாய்காலத்தின் போது, தான் கோயிலுக்கு சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

சில மணிநேரத்தில், அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வைத்தியாவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அந்த நபர் வைத்தியாவின் மகனைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார்.

 

0
Shares