யோஷித ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவூக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவூ அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கமைய யோஷித ராஜபக்ஸ நாளைய தினம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யூம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை மற்றும் இரத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவூ செய்தமை மற்றும் ஆடம்பர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

0
Shares