அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

0
Shares