குண்டு துளைக்காத பஸ்சில் உலக லெவன் அணி லாகூரை சென்றடைந்தது

பாகிஸ்தானின் லாகூர் நகரில், 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்தத்தாக்குதலில் வீரர்கள் காயமடைந்த்ர்த்திருந்தனர்.
அதன் பிறகு பாதுகாப்பு பிரச்சினை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய பிறகு சொந்த மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

தற்போது உலக லெவன் அணி, பாகிஸ்தான் அணியுடன் சுதந்திர தின கிண்ணத்திற்காக மூன்று க்கு போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகளின் முதலாவது போட்டி இன்று லாகூரில் ஆரம்பமாகிறது.

இந்த போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இது சர்வதேச போட்டிகளின் சாதனை பட்டியலில் இணையும் என கூறப்படுகிறது.

டு பிளிஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் அணி நேற்று அதிகாலை லாகூரை சென்றடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத பஸ்சில் வீரர்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நட்சத்திர ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வீரர்களின் வருகையால் வீதிப்போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது.

6 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அமைந்திருக்கிறது. அது மட்டுமின்றி போட்டிக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

0
Shares