30 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது

ஹட்டனில் 30 வருடங்கள் பழமை வாய்ந்த யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

ஹட்டன் – செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றே நேற்று மாலை இடிந்து விழுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தேவாலயம் கடந்த 1987 ஆண்டு அந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹட்டனில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மேலும் சில கட்டங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0
Shares