இந்தியத்தொடர் மூலம் Number One அணியாக மீண்டும் அவுஸ்திரேலியா

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியே இந்த காலகட்டத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் Michael Clarke  குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விராட் கோலி மற்றும் ஸ்டீவன் சுமித் ஆகியோரில் சிறந்த வீரர் யார்? திறமையான அணித்தலைவர் யார்? இது காலத்தின் கேள்வி ஆனால் நிச்சயமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த துடுப்பாட்ட வீரர் என நான் கருதுகிறேன்.

ஆஸ்திரேலியாவின் விளையாட்டு தற்போது சீரற்றதாக இருக்கிறது. தங்கள் அணி உலகின் Number One அணியாக திகழ வேண்டும் என்பதே அவுஸ்திரேலியா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்தத்தொடரில் அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், ஒரு நாள் போட்டி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை அடைய முடியும் என Michael Clarke குறிப்பிட்டுள்ளார்.

 

0
Shares