முரளியின் பெயர் அகற்றப்பட்டது

 

கண்டி பல்­லே­கல சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்­திற்கு பொறிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்­தையா முர­ளி­த­ரனின் பெயர் தற்­போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத்தகவலை முரளிதரனின் தந்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கண்டி மல்­வத்து மாநா­யக்க தேரரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்­வத்து மாநா­யக்க தேரரை சந்­தித்த முரளியின் தந்தை இது குறித்த முழுமையான விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த நிலையில் இதனை உட­ன­டி­யாக விளை­யாட்­டுத்துறை அமைச்சருக்கு அறிவிப்பதாகவும் மாநா­யக்க தேரர் உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0
Shares