உலகக்கிண்ணத்தில் கலக்கப்போகும் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான டோனி எதிர்வரும் உலகக்கிண்ணத்தில் நிச்சயமாக விளையாடுவார் என ரவிசாஸ்திரி அறிவித்துள்ளார்.

36 வயதான டோனி 2019-ம் ஆண்டு உலக கிண்ண அணியில் இடம் பெறுவாரா? என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் 2019 உலக கிண்ணத்தில் டோனி கட்டாயம் விளையாட வேண்டும் என்று அணியின் பயிற்சியாளரும், முன்னாள் அணித்தலைவருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் உலகின் சிறந்த விக்கெட் காப்பாளரான டோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சமூக வலயத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

0
Shares