சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி கறுப்பு பட்டியலில்

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி கறுப்பு பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சபை அறிவித்துள்ளது.

இந்த கறுப்பு பட்டியலில் மேலும் சில கல்லூரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் இளநிலைப் பட்டதாரிகளுக்கு பீ எல் ஏ பீ பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய மருத்துவ சபையால் வெளியிடப்பட்டுள்ள இந்த கறுப்பு பட்டியலில் இந்தியாவின் மஹாத்மா காந்தி ஞாபகார்த்த மருத்துவ கல்லூரியும் உள்ளடக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares