ஜனாதிபதியுடன் கொஞ்சி மகிழ்ந்த குட்டி இளவரசி

பொலன்னறுவை – கவுடுல்ல, மிரிஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதியின் மடியில் இருந்து விளையாடிய சிறுமி தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்தன.

மெதிரிய பகுதியினைச் சேர்ந்த தனுல்யா என்ற சிறுமி ஜனாதிபதியை கண்டவுடன் அவரிடம் ஓடி செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு பிரிவினர் சிறுமியை தடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி உடனடியாக அந்த சிறுமிக்கு இடமளிக்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்ட சிறுமி நிகழ்வு நிறைவடையும் வரை ஜனாதிபதியுடன் மேடையில் விளையாடியதுடன், மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பிரபலங்களுடனும் விளையாடியுள்ளார்.

தற்போது இதுதொடர்பிலான காணொளி ஒன்று வைரலாக பரவி வருகின்றது.

0
Shares