தனி கட்சி ஒன்றினை தொடங்கவுள்ளதாக கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக தனி கட்சி ஒன்றினை தொடங்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. எனக்கும் அரசியல் பற்றிய எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகவில்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவேன். மாற்றத்தை நான் முன்னெடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

0
Shares