வெற்றியின் மூலம் தரவரிசையில் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப்போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது..

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 482 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 262 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்க்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த்திருந்தது.

அதன்படி 317 என்ற வெற்றி இலக்கோடு இரண்டாவது இனிக்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி ஐந்தாம் நாளான இன்று 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares