களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மருத்துவ பீட மாணவர்களை தவிர்ந்த ஏனைய மாணவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி விடுதிக்கு திரும்புமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 05 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares