காதலனை அடைவதற்காக திருடிய பெண்

பெண்ணொருவர் தனது காதலனை பெற்றுக்கொள்வதற்காக, தான் வேலை செய்த வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதால் கைதாகி உள்ளார்.

”நினைப்பதெல்லாம் கிடைக்கும் மந்திரம் உண்டு ” என்று பெண் மந்திரவாதி ஒருவரின் விளம்பரமொன்று அண்மைக்காலத்தில் பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனை தேடி கொடுக்குமாறு விளம்பரத்தில் குறிப்பிடபட்டிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

தனது காதலனை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமாயின் வங்கி கணக்கில் பணம் வைப்பிடுமாறு மந்திரவாதி கூறியதன் காரணத்தால் குறித்த பெண் , தான் வேலை செய்த வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 670000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு உள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

0
Shares