ஜி.வியின் ‘100% காதல்’ படப்பிடிப்பு ஆரம்பம்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘100% காதல்’ திரைப்படம்.

0
Shares