இறுதி சடங்குகள் முடிந்த பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்த பெண்

சில நாட்களுக்கு முன்னர் கடவத்த பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பெண்ணொருவர் 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரின் ஏழாவது நாள் நினைவஞ்சலியை நடத்தும் வேளையிலேயே இவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஏழு பிள்ளைகளின் தாயாகிய இவரின் சடலம் மூன்று பிள்ளைகள் அடையாளம் கண்டதன் பின்னரே வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தவறாக அடையாளம் கூறியதாலேயே இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0
Shares