மலைவாழ் மக்களின் வளர்ச்சிகாக 32 ஆண்டுகளாக பாடுபட்டவர் இவர்தான் !

இவர்தான் அலோக் சாகர்ஜி.

இவர் இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் IIT யில் படித்தவர், USA வில் ஹட்சன் நகரில் Mphil &Phd யும் படித்தவர் பின்பு டெல்லி IIT யில் பேராசிரியர் ஆகவும் வேலை பார்த்தவர். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இவரது மாணவர் தான். சாகர்ஜி தற்பொழுது மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்களின் வளர்ச்சிகாக 32 ஆண்டுகள் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் எத்தனை மரங்கள் நட்டேன் என கணக்கிடு செய்யவில்லை என்கிறார். மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார். தன்னை பற்றி யாராவது தெரிந்து கொண்டால் அந்த ஊரை விட்டு வேறு ஒரு மாவட்டத்திற்கு சென்று விடுவார். தன்னலம் கருதாத இவரை தலை வணங்கவேண்டும் .இவரின் வீட்டுக்கு கதவுகளே இல்லை. உலகைவிட்டு செல்லும் போது எதுவும் வருவதில்லை அப்புறம் எதற்கு இந்த ஆடம்பர வாழ்க்கை என்பாராம் வேடிக்கையாக.

0
Shares