உடலை அழகாக வைத்திருக்க இதை அருந்துங்கள்

இன்றைய காலகட்டத்தில் உடலை அழகாக கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் முறைகளில் ஆப்பிள் சீடர் வினிகர் இடம் பிடித்துள்ளது.

உணவின் செமிபாட்டை துரிதப்படுத்துவதுடன் உடலின் புத்துணர்ச்சி மற்றும் தூக்கமின்மையையும் நீக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது.

இஞ்சிச்சாறு அருந்தினால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இதனையும் அருந்தினால் உடலுக்குள் சற்று எரிச்சலாவே இருக்கும்,ஏன் என்றால் கெட்ட கொழுப்புகளை நீக்குவதால் ஏற்படும் எரிச்சலாகும்.

தினமும் காலையில் ஆப்பிள் சீடர் வினிகர் அருந்தினால் உயர் இரத்த அழுத்தம் குறைவதுடன் உடல் பொலிவு பெற்று ஆயுளும் அதிகரிக்க செய்கிறது.

உடலில் உள்ள அனைத்து விதமான சரும பிரச்சினைகளுக்கும் நல்லதொரு நிவாரணியாக ஆப்பிள் சீடர் வினிகர் சரி செய்கிறது.

இதனை ஒரு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்த வேண்டும்.அதில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் உடல் உறுப்புகளுக்கும் பற்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகையால் தண்ணீர் சேர்க்காமல் ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்காதீர்கள்.

0
Shares