உலகிலேயே மிகவும் அசிங்கமான பெண் யார் தெரியுமா

Lizzie Velasquez என்னும் பெண் சாதாரண மனிதர்களை போல தோற்றம் கொண்டவர் அல்ல. தனது
வயதை விட அதிக வயதை கொண்டவர் போல தோற்றம் கொண்ட இவர் தன்னுடைய பெற்றோரை தவிர அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு பெண் .

ஒரு முறை “உலகிலேயே மிகவும் அசிங்கமான பெண் இவர் தான்” எனவும், ”சமூகத்திற்கு ஒரு உதவியாக இருக்கும் வகையில் நீ தற்கொலை செய்து கொள்” எனவும் தனது பாடசாலை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததை கண்டு மிகவும் மனம் உடைந்தேன் என இவர் கூறி உள்ளார்.

ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒரு சவாலாக நினைத்து வாழ்ந்த அவர் இன்று பல மனிதர்களாலும் பிரபலமாக பேசப்படும் ஒரு ஊக்குவிப்பு பேச்சாளராக சேவையாற்றி வருகிறார். . இவர் பல நூல்களையும் எழுதி உள்ளதோடு இவரால் எழுதப்பட்ட “உலகிலேயே மிகவும் அசிங்கமான பெண்” எனும் நூல் 1000 பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

0
Shares