மன நோயாளிகளுக்கு அன்பு மட்டுமே மருந்து -தீபிகா படுகோன்

அக்டோபர் மாதம் 10-ம் திகதி மனநோய் பாதிப்பு தினத்தை ஒட்டி கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனம் விழவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவில் பிரபல நடிகை தீபிகா படுகோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு வருகை தந்த மனநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரோடும் கைகுலுக்கி சந்தோஷமாக பேசினார்.

அதனை தொடர்ந்து அங்கு உரையாற்றிய தீபிகா படுகோன், ” மன நோய் என்பது இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு நோய். யாருமே இந்த நோயை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. மன நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் அன்பாக நடத்த வேண்டும் முடிந்தவரை அவர்களுக்கு உதவிகளையும் செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

0
Shares