அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் இந்த நிலைமை காரணமாக இன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் மனோகணேசன். ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அவர், தற்போதைய நிலைமைகள் குறித்து விபரித்தார்.

பேச்சுவார்த்தையின் போது, வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவ தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0
Shares