ஒருகொடவத்தையில் தீ விபத்து 

ஒருகொடவத்த பிரதேசத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேயிலை பரிமாற்றத்திற்கான பெட்டிகள் தயாரிக்கும்  தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்ச்சாலைக்கு அருகில் இருந்த 4 வீடுகளுக்கு சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு  கிராண்ட்பாஸ் தீயணைப்பு படையின் உதவியுடன் தீயணைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் தொழிற்ச்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது என்றும் தீ பரவியமைக்கான காரணம் இது வரை அறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (RA)

0
Shares