கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அதிக சம்பளம் கொடுங்கள்

”கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அதிக ஊதியம் வழங்குங்கள்” என  இங்கிலாந்து  மகளிர் அணியின் முன்னால்  கேப்டனும் ஐ.சீ.சீ. மகளிர் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகியுமான க்ளேர் கோனார் அறிவுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை பாருங்கள் அவர்களுக்கு வழங்குவது போல அதிகமான ஊதியங்களை அனைவருக்கும் வழங்குங்கள் என இவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி  வீராங்கனைகள் 8 மடங்கு ஊதியங்களை பெறுவதாகவும் இதை குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்  என்றும் இவர் கூறி உள்ளார்.  அவுஸ்திரேலிய அணி  வீராங்கனைகளின் சம்பளத்திற்க்காக இப்போது ரூ.359 கோடி ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

(RA)

0
Shares