தொகுதி அமைப்பாளர்கள்  இருவர் பதவி  நீக்கம் 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து  இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து மஹிந்தானந்த அழுத்தகமகேயும், மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து  குமார வெல்கமவும்  நீக்கப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ர அபயவீர மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இன்னும்   சில தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளார் என  அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. (RA)

0
Shares