நாய்க்குட்டி நோய் வாய்ப்பட்டால் லீவாம்

இத்தாலிய பெண்ணொருவர் தான் வளர்க்கும் நாய்க்குட்டி  நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் அவர்  பணி புரியும் அலுவலக உயரதிகாரியிடம்  விடுமுறை வேண்டியுள்ளார்.

இந்நிலையில் அவர் வீடு   செல்ல அனுமதி வழங்காத  உயரதிகாரி  மீது குறித்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளாராம்.

இப்பெண் ஐரோப்பாவின் மிகப் பெரிய விலங்கு உரிமைகள் குழுக்களில் வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் தனது வழக்கை வென்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மிருகத்தை கைவிட்டு துன்புறுத்துவோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் , 10,000 யூரோ அபராதம் விதிப்பதற்குமான  இத்தாலிய தண்டனைக்குரிய சட்டத்தின் விதிமுறைகளால் அவர்களின் வாதம் வெற்றி பெற்றது. (RA

)

0
Shares