மெரசல் காளையுடன் மோதுகிறது இந்தமான்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பே தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படத்தின் மீது தான்.

மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு  உள்ளதால் ஏனைய பட தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை வெளியிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகுமாரின் கொடிவீரன் படம் ஏற்கனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீபாவளி ரேஸில் மேயாத மான் படமும் இணைந்துள்ளது. “மெர்சல் காளையுடன் மானும் வருகிறது”
என புதிய போஸ்டரில் அவர்களே அறிவித்துள்ளனர். மேயாத மான் திரைப்படத்தில் காதல் முதல் கல்யாணம் வரை ப்ரியா மற்றும் வைபவ் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares