ஏவுகணை சோதனை வெற்றி கண்ட இந்தியா

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நிர்பாய் ஏவுகணை கடந்த 2013-ம் ஆண்டு முதல் சோதிக்கப்பட்டு வருகிறது.

நீண்ட தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணை 300 கிலோ வெடிபொருளை ஏந்தி செல்லும் திறன் கொண்டது.

இன்று பகல் 11.20 மணிக்கு ஒடிசா மாநில கடற்கரை அருகே சந்திப்பூரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்த சோதனையின் தொடக்கம் வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

0
Shares