எழுத்து கட்டுப்பாட்டை நீக்கிய டுவிட்டர்

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் டுவிட் செய்யும் வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக அதிகரித்துள்ளது.

புதிய அப்டேட் மூலம் சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் டுவிட்டர் புதிய அப்டேட் சார்ந்த அதிகார்பூர்வ அறிவிப்பு அந்நிறுவன வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுவிட் செய்வதற்கான வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து டுவிட்டர் பயன்பாடு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டுவிட் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முன்பை விட வாடிக்கையாளர்கள் வேகமாகவும், மிக எளிமையாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என டுவிட்டர் தளத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய மாற்றம் ஜப்பான், கொரியா மற்றும் சீன மொழிகள் தவிர்த்து மற்ற அனைத்து மொழிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares