145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவரும் ஆராய்ச்சியாளருமான ஸ்டீவ் சுவீட்மேனே இதனை கண்டுபிடித்துள்ளார்.

கிராண்ட் ஸ்மித் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ‘டோர்செட்” கடற்கரையில் பாறைகளுக்கு இடையே கூர்மையான 2 பற்களை கண்டெடுத்தார்.

அவை எலி போன்று வலைக்குள் (பொந்துகளுக்குள்) வாழும் உயிரினத்துக்குரியது.

அந்த பல் மிகவும் கூர்மையாக உள்ளது எனவும் அதே நேரத்தில் உணவு பொருட்களை துண்டாக்கி அதை மென்று சாப்பிடும் வகையில் உள்ளது எனவும் எலியின் பல்லுடன் ஒத்து போகிறது எனவும் தெரிவித்தார்.

அந்த பற்களுக்குரிய உயிரினம் சுமார் 14 ½ கோடி (145 மில்லியன் ) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் சுவீட்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உயிரினம் பாலூட்டி வகையை சேர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
Shares