ஒரே தடவை டிப்பரில் மோதிய மூன்று மோட்டார் சைக்கிள்கள்

இமதுவ பிரதேசத்தில் ஒரே தடவையில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் டிப்பர் வண்டியொன்றில் மோதியுள்ளன.

இளைஞர்கள் ஐவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதில் இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களின் வேகத்தை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

0
Shares