தேசிய கராத்தேயில் தமிழ் மாணவிக்கு தங்கம்

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இலங்கை தேசிய கராத்தே சுற்றுப்போட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 6ஆம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியொருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதில் பாடசாலை மட்டத்தில் மாவட்ட ரீதியில் தேர்வுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே வடமாகாண கராத்தே சுற்றுப் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0
Shares