மும்பைக்கு புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மும்பை நோக்கி பயணித்த விமானம் ஒன்று மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

யு.எல் 141 என்ற விமானமே நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பை நோக்கி பயணித்த நிலையில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னர் அதிலிருந்த பயணிகள் இன்று அதிகாலை வேறு ஒரு விமானம் ஊடாக மும்பை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0
Shares