மொனராகலையில் பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனம்

மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் சியம்பலாண்டுவ பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0
Shares