இணையத்தை கலக்கும் இலங்கை வீரர்

இலங்கையை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ஒருவர் சர்வதேச அளவில் பேசப்படுவதுடன், இணையத்தளங்களிலும் பிரபல்யமடைந்துள்ளார்.

மலேசியாவில் இடம்பெற்றுவரும் இளையோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் கலந்துகொண்டுள்ள கெவின் கொத்திகொடே என்ற வீரரே தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

காலி மகிந்த வித்தியாலயத்தை சேர்ந்த கெவின் கொத்திகொடே என்ற வீரர் இப்போது சமூக ஊடகங்களில் வித்தியாசமான பந்துவீச்சு முறையால் வைரலாகியிருக்கிறார்.

இலங்கை அணியின் எந்தவொரு சிரேஸ்ட வீரரது சாயலும் இன்றி தென் ஆப்பிரிக்காவின் போல் ஆடம்ஸின் பந்துவீச்சு சாயலில் இவரது பந்து வீச்சு அமைந்திருக்கின்றது.

போல் ஆடம்ஸ் இடதுகையால் பந்து வீசுபவர், இவர் வலது கையால் அதே சாயலில் லெக் ஸ்பின் பந்து வீச்சில் அசத்துகின்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் அமையும் என்றே பேசப்படுகின்றது.

0
Shares