தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மைக்காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, அரசாங்கத்திற்கு தொடர்சியான அழுத்தங்களை கொடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் துரித கதியில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

0
Shares