அகதிகள் பயணித்த நான்கு படகுகள் இடைமறிப்பு

நியுசிலாந்து நோக்கி அகதிகள் பயணித்த நான்கு படகுகள் இடைமறிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய கடலோர காவல்படை அதிகாரிகளினால் இந்த படகுகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக நியுசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இடைமறிக்கப்பட்டுள்ள படகுகளில் 164 புகழிடக்கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள படகுகளில் இலங்கையைச் சேர்ந்த புகழிடக்கோரிக்கையாளர்களும் பயணித்திருக்கலாம் என நியுசிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

0
Shares