யாழில் வெள்ள அபாயம்

அடுத்து வரும் 24 மணித்தியாங்களுக்கு யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு தேவையான பாதுகாப்பு பிரிவுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிக மழை மேலும் தொடர்ந்தால், மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கான இடம் தொடர்பில் கடற்படை மற்றும் விமான படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
Shares