இலங்கை அணிக்கு சவாலாக அஷ்வின் இருப்பார்- விர்த்திமான் சகா

இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முழுமையாக தோல்வியடைந்தது. இருந்தாலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கின்ற அதே வேளை வெல்ல வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.

இந்த போட்டிக்கான பயிற்சிகளில் இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளநிலையில், பயிற்சிக்கு பிறகு விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது-

“இலங்கை அணியினரை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் இந்த தொடரை முழுமையாக வென்றால் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்” எனவும்

“பந்துவீச்சில் அஸ்வின் மற்றவர்களை விட சிறப்பானவர். அதிகமான மாறுபாடுகளை வெளிப்படுத்துவார். எனவே அவர் இலங்கை வீரர்களுக்கு மிகுந்த சவால் அளிப்பார். அடுத்த வீரர்களும் கண்டிப்பாக இலங்கை அணிக்கு சவாலாக இருப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0
Shares