ரஜினி, கமலிற்கு ஆந்திர நந்தி விருது

ஆந்திர மாநிலத்தின் பிரபலமான திரைப்பட விருதான நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2014-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருது கமல் ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்திற்கு 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருது கிடைக்கிறது.

இந்த விருதுகளில் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பாகுபலி திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாகுபலி திரைப்படம் தேசிய விருது பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நந்தி விருதுகளில் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

0
Shares