‘அண்ணா துரை’யின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று

விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘அண்ணா துரை’.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.

இதில் பாடல் வெளியீட்டின் போதே பாடல்கள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் வலைத்தளத்திலும் வெளியிடப்படுகிறது.

ரசிகர்கள் www.vijayantony.com என்ற இணையதளத்திற்கு சென்று பாடல்களை இலவசமாக download செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ‘சைத்தான்’ படத்தை போல் ‘அண்ணா துரை’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

0
Shares