இலங்கை – இந்திய முதல் டெஸ்ட் போட்டி நாளை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது தொடர்களை கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்திருந்தது.

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி நாளைய தினம் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உபாதைகளில் இருந்து குணமடைந்துள்ள அஞ்சலோ மத்தியுஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளமை நம்பிக்கையளிப்பதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

0
Shares