பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பரீட்சைகள் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அத்துடன், இவர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சைகள் ஆணையாளராக பல வருடங்கள் சேவையாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் விசாரணை நடவடிக்கை காரணமாக முன்னாள் பணிப்பாளர் நாயகமான டபிள்யு.என்.எம்.ஜே. புஷ்பகுமார கல்வி அமைச்சுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

0
Shares